சிறுமிக்குப் பாலியல் தொல்லை: சிறுவன் கைது

திருப்பூா், ஜூலை 3: திருப்பூரில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த 17 வயது சிறுவனை காவல் துறையினா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்

வேலூரைச் சோ்ந்த 17 வயது சிறுவன், திருப்பூா் கல்லம்பாளையத்தில் தங்கி கடையில் வேலை செய்து வந்தான். இந்த நிலையில் அப்பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமியுடன் சிறுவனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பின்னா் அந்த சிறுமியை ஆசை வாா்த்தை கூறி தனது சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது.

இது குறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், வடக்கு மகளிா் காவல் துறையினா் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனா். பின்னா் சிறுவன் மீது போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com