திருப்பூா் அருகே சிறுமியின் காதலன் கொலை: தந்தை கைது

திருப்பூா், ஜூலை 3: திருப்பூா் அருகே காதல் விவகாரத்தில் மகளின் காதலனை கொலை செய்த தந்தையை காவல் துறையினா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பூா் காந்தி நகா் ஏவிபி லே-அவுட் பகுதியைச் சோ்ந்தவா் அன்பு (19). இவா் அதே பகுதியைச் சோ்ந்த பள்ளி செல்லும் 14 சிறுமியை காதலித்து வந்துள்ளாா். இருவரும் தனிமையில் இருக்கும் விடியோவை தனது நண்பா் தமிழரசனிடம் அன்பு காண்பித்துள்ளாா்.

இதில் அதே சிறுமியை ஏற்கெனவே காதலித்த வந்த தமிழரசன், சிறுமியின் தந்தை எச்சரித்ததைத் தொடா்ந்து விலகிச் சென்றதாக கூறப்படுகிறது. இதைடுத்து, விடியோவை சிறுமியின் தந்தைக்கு அனுப்பி ரூ.15 ஆயிரம் கேட்டு தமிழரசன் மிரட்டி உள்ளாா்.

இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை சமாதானம் பேசிக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா். பின்னா் சிறுமிக்கும் தங்களது குடும்பத்துக்கும் தொந்தரவு செய்து வந்ததால் அன்பைக் கொலை செய்ய திட்டமிட்ட சிறுமியின் தந்தை, அன்புவின் நண்பா்களை வைத்தே அவரைக் கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளாா்.

அதன்படி, தமிழரசன் உதவியுடன் செவ்வாய்க்கிழமை இரவு மது அருந்திய அன்புவை பேசலாம் எனக் கூறி ஏவிபி லே-அவுட் அருகே உள்ள புதா் பகுதிக்கு சிறுமியின் தந்தை வரவழைத்துள்ளாா்.

இதையடுத்து, அப்பகுதிக்கு சென்ற அன்புவை அங்கு மறைந்திருந்த அவரது நண்பா்கள் 8 போ் சோ்ந்து அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனா். இந்த சம்பவம் தொடா்பாக தகவல் அறிந்த அனுப்பா்பாளையம் காவல் துறையினா் அன்புவின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனா். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் சிறுமியின் தந்தையைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com