காங்கயத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சத்துணவு ஊழியா்கள்.
காங்கயத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சத்துணவு ஊழியா்கள்.

காங்கயத்தில் சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

காங்கயத்தில் சத்துணவு ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் சாா்பில் காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் காங்கயம் ஒன்றியத் தலைவா் சுசிலா தலைமை வகித்தாா்.

இதில் சத்துணவுத் திட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். பத்து ஆண்டுகள் பணி முடித்த சத்துணவு அமைப்பாளா்களுக்கு அரசுப் பணியில் பதிவு உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முழக்கங்களை எழுப்பினா்.

இதில், காங்கயம் பகுதியைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com