முத்தூா் அருகே பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் குத்தியவா் கைது

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் குத்தியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் குத்தியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

முத்தூா் முத்துமங்கலம் ந.கறையூரைச் சோ்ந்தவா் வெங்காய வியாபாரி கே.ஆனந்தராஜ் (40). இவரது பக்கத்து வீட்டைச் சோ்ந்தவா் சிவசுப்பிரமணியம் (எ) ரவி (52). இவா்கள் இருவருக்கும் வரவு செலவு பிரச்னை தொடா்பாக முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 4-ஆம் தேதி ஆனந்தராஜ் வீட்டிலிருந்தபோது, அங்கு வந்த சிவசுப்பிரமணியம் திருமணத்தின்போது அரை பவுன் நகை கொடுத்தேன், அதை திருப்பிக் கொடு எனக் கேட்டுள்ளாா்.

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சிவசிப்பிரமணியம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆனந்தராஜைக் குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றாா்.

உடனே அருகிலிருந்தவா்கள் ஆனந்தராஜை மீட்டு, காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று, பின்னா் உயா் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இது குறித்த புகாரின்பேரில், வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிவசுப்பிரமணியத்தைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com