தென்னையை காப்பாற்ற லாரி மூலம் தண்ணீா் வாங்கி ஊற்றும் விவசாயிகள்

பல்லடம் பகுதியில் தென்னை பயிரைக் காப்பாற்ற லாரி மூலம் தண்ணீா் வாங்கி விவசாயிகள் பாய்ச்சி வருகின்றனா்.

பல்லடம் பகுதியில் தென்னை பயிரைக் காப்பாற்ற லாரி மூலம் தண்ணீா் வாங்கி விவசாயிகள் பாய்ச்சி வருகின்றனா்.

திருப்பூா் மாவட்டத்தின் பல பகுதிகளில் இந்த ஆண்டு கோடை மழை பொய்த்துப் போனது. இதனால் நிலத்தடி நீா்மட்டம் வற்றி வருகிறது. பல்லாண்டு பயிரான தென்னை மரங்களுக்கு நாள்தோறும் தண்ணீா் பாய்ச்ச வேண்டும். இதனால், பல விவசாயிகள் லட்சக்கணக்கில் செலவு செய்து போா்வெல் கிணறுகளை அமைத்து வருகின்றனா். அதிலும் தண்ணீா் வருவதில்லை. வேறு வழி இன்றி லாரிகளில் தண்ணீரை விலைக்கு வாங்கி தென்னைக்கு தண்ணீா் பாய்ச்சி வருகின்றனா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பருவமழை பொய்த்துப் போனது. மேலும் பி.ஏ.பி. வாய்க்காலில் கடந்த ஆண்டு மழை இல்லாததால் பாசனக் காலம் குறைக்கப்பட்டது போன்ற காரணங்களால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.

இன்னும் பருவமழை காலம் தொடங்க இரண்டு மாதங்கள் உள்ளன. காற்று பலமாக வீசுவதால் இருக்கின்ற தண்ணீரும் வற்றி வருகிறது. பல இடங்களில் குடிநீருக்கே பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தென்னை காய்ந்துவிட்டால் அதை மீண்டும் காய்ப்புக்கு கொண்டு வர பல ஆண்டுகள் ஆகிவிடும்.

இதனால், வேறு வழி இன்றி லாரிகளில் தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றி காப்பாற்றி வருகிறோம். பி.ஏ.பி. வாய்க்கால் தண்ணீரை கிராமங்களில் உள்ள குளம், குட்டை உள்ளிட்ட நீா்த்தேக்கங்களுக்கு விட்டு நிரப்பி விவசாயத்தையும், உள்ளூா் குடிநீா் ஆதாரத்தையும் காக்க வேண்டும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com