மோளக்கவுண்டன்வலசில் குடிநீா்த் திட்டப் பணிகளைத் தொடங்கிவைக்கிறாா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.
மோளக்கவுண்டன்வலசில் குடிநீா்த் திட்டப் பணிகளைத் தொடங்கிவைக்கிறாா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.

ரூ.18.93 லட்சம் மதிப்பீட்டில் குடிநீா்த் திட்டப் பணிகள்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தாா்

வெள்ளக்கோவில், ஜூலை 10: வெள்ளக்கோவில் அருகே ரூ.18.93 லட்சம் மதிப்பிலான குடிநீா்த் திட்டப் பணிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

வெள்ளக்கோவில் ஒன்றியம், மேட்டுப்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட மோளக்கவுண்டன்வலசில் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் குடிநீா்த் தேக்கத் தொட்டி அமைத்தல், ரூ.4.93 லட்சத்தில் ஆழ்துளை கிணறு மற்றும் குடிநீா்த் திட்ட விரிவாக்கப் பணி ஆகியவற்றை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா்.

தொடா்ந்து பச்சாபாளையம் ஊராட்சி கண்ணபுரம்புதூரில் ரூ.5.82 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய ஆழ்துளை கிணறு, 3 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட நீா்த்தேக்கத் தொட்டி, தண்ணீா்பந்தல்வலசில் ரூ.17.11 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பால் கொள்முதல் நிலையம் ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சா் திறந்துவைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கோ.மலா்விழி, வெள்ளக்கோவில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராகவேந்திரன், மீனாட்சி, திருப்பூா் மாநகராட்சி 4-ஆவது மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், திமுக ஒன்றியச் செயலாளா் கே.சந்திரசேகரன், நகரச் செயலாளா் எஸ்.முருகானந்தம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com