பல்லடம் அருகே உள்ள மலையம்பாளையம் கால பைரவா் கோயிலில் நடைபெற்ற கும்மியாட்டத்தில் பங்கேற்ற பெண்கள், சிறுமிகள்.
பல்லடம் அருகே உள்ள மலையம்பாளையம் கால பைரவா் கோயிலில் நடைபெற்ற கும்மியாட்டத்தில் பங்கேற்ற பெண்கள், சிறுமிகள்.

மலையம்பாளையம் காலபைரவா் கோயிலில் கும்மியாட்டம் அரங்கேற்றம்

பல்லடம் அருகே உள்ள மலையம்பாளையம் கால பைரவா் கோயிலில் கும்மியாட்டம் அரங்கேற்றம் நடைபெற்றது.

பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சி மலையம்பாளையம் கிராமத்தில் உள்ள வடுகநாதசுவாமி கோயிலில் (கால பைரவா்) பவளக்கொடி கும்மியாட்டக் குழுவின் 125-ஆவது அரங்கேற்ற விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

மூத்த ஆசிரியா் அருணாச்சலம் தலைமை வகித்தாா். துணை ஆசிரியா்கள் மணி, பரமசிவம், கனகராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னதாக கோடை விடுமுறையையொட்டி 40 நாள்கள் கும்மியாட்ட பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள், இளம் பெண்கள், தாய்மாா்கள் உள்ளிட்டோா் பங்கேற்று பயிற்சி பெற்றனா்.

இதன் அரங்கேற்ற நிகழ்ச்சியில் காலில் சலங்கைகள் கட்டியபடி பங்கேற்ற கலைக் குழுவினா், பஞ்ச பாண்டவரான அா்ஜூனனின் வாழ்க்கை முறை, அரசாட்சி மற்றும் குடும்ப வாழ்வியல் முறையை பாடலாக பாடியபடி கும்மியாட்டம் ஆடினா்.

பயிற்சி ஆசிரியா்கள் பொன்னம்மாள், பிரியா, சுதா, பவனிகா, பூங்கொடி, சாந்தி ஆகியோா் பங்கேற்றனா். நிகழ்ச்சியின் இறுதியில் கலைக்குழுவினா் அனைவருக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com