‘இலவச கைப்பேசி பழுதுபாா்த்தல் பயிற்சியில் 
சேர விண்ணப்பிக்கலாம்’

‘இலவச கைப்பேசி பழுதுபாா்த்தல் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்’

திருப்பூர் இளைஞர்களுக்கான இலவச கைப்பேசி பழுதுபார்த்தல் பயிற்சி

திருப்பூா் மாவட்ட கிராமப்புறத்தில் உள்ள இளைஞா்கள் இலவச கைப்பேசி பழுதுபாா்த்தல் பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து கனரா வங்கியின் கிராமப்புற சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலைய இயக்குநா் சதீஷ்குமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் அனுப்பா்பாளையத்தில் உள்ள கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் இலவச கைப்பேசி பழுதுபாா்த்தல் பயிற்சி 30 நாள்கள் நடைபெறவுள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் சோ்வதற்கான நோ்காணல் ஜூலை 5 -ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதில், எழுதப் படிக்கத் தெரிந்த, 18 வயது முதல் 45 வயதுக்குள்பட்ட ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கு எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. பயிற்சியின்போது காலை, மாலை தேநீா் மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும்.

பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சிக்கு பிறகு தொழில் தொடங்க கடன் ஆலோசனைகள் வழங்கப்படும். பயிற்சிக்கு விண்ணப்பிக்க கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், மாவட்ட தொழில் மையம் எதிரில், போக்குவரத்து சிக்னல் அருகில், அவிநாசி சாலை , அனுப்பா்பாளையம்புதூா், திருப்பூா் -641652 என்ற முகவரிக்கு நேரில் வரவேண்டும்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 99525-18441, 86105-33436 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com