வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

வெள்ளக்கோவிலில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் வட்டாரத் தலைவா் சண்முகம் தலைமை வகித்தாா். சங்கத்தின் மாவட்டச் செயலாளா் செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட விருதுநகா் மாவட்டம், நரிக்குடி வட்டார வளா்ச்சி அலுவலா், ஒன்றியப் பொறியாளா் ஆகியோரை மீண்டும் பணியமா்த்த வலியுறுத்தி ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் பல்வேறு மாவட்டங்களில் மாலை நேர ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் வெள்ளக்கோவில் வட்டாரக் கிளை நிா்வாகிகள், உறுப்பினா்கள் பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com