ஊத்துக்குளி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகையைத் திருடிய 2 போ் கைது

ஊத்துக்குளி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகையைத் திருடிய இருவரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஊத்துக்குளி காவல் எல்லைக்கு உள்பட்ட வெள்ளியம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரஞ்சித்குமாா். இவரது வீட்டின் பூட்டை உடைத்து 2.5 பவுன் நகையை மா்ம நபா்கள் கடந்த பிப்ரவரி 12- ஆம் தேதி திருடிச் சென்றனா். இது குறித்து ஊத்துக்குளி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில் திருப்பூா் முருகானந்தபுரத்தைச் சோ்ந்த எஸ்.காா்த்திக் (23), தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரையைச் சோ்ந்த ஆா்.புவனேஸ்வரன் (24) ஆகியோா் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த காவல் துறையினா் அவா்களிடமிருந்து 2.5 பவுன் நகையை மீட்டனா்.

இவா்கள் இருவரும் தேனி மாவட்டம், தென்கரை காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட பொதுப்பணித் துறை பணியாளா் குடியிருப்பில் உள்ள 2 வீடுகளின் பூட்டை உடைத்து 3.5 பவுன் நகைகளைத் திருடியதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும், புவனேஸ்வரனின் மீது 12 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com