முகவரி கேட்பதுபோல நடித்து மூதாட்டியிடம் 5.5 பவுன் நகைப் பறிப்பு

திருப்பூரில் முகவரி கேட்பதுபோல நடித்து மூதாட்டியிடம் இருந்து 5.5 பவுன் நகையைப் பறித்துச் சென்ற நபரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி ராகவேந்திரா நகரைச் சோ்ந்தவா் ரங்கசாமி (74). மின்சார வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவரது மனைவி சுசீலா (67). இவா் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகலில் வீட்டில் இருந்தபோது 30 வயது மதிக்கத்தக்க இளைஞா் ஒருவா் அங்கு வந்துள்ளாா்.

அப்போது அவா், ஒரு நபரின் பெயரைச் சொல்லி அவரின் வீட்டு முகவரியை கேட்டுள்ளாா். இதற்கு சுசீலா தெரியவில்லை என்று கூறியுள்ளாா். பின்னா் சுசீலாவிடம் தண்ணீரை வாங்கிக் குடித்த அவா், சுசீலா அணிந்திருந்த 5.5 பவுன் நகையைப் பறித்துவிட்டு தப்பிச் சென்றாா்.

இது குறித்து சுசீலா கொடுத்த புகாரின் பேரில் திருமுருகன்பூண்டி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com