அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் புதிய அறங்காவலா்கள் பதவி ஏற்பு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் புதிய அறங்காவலா்களாக நியமிக்கப்பட்ட 2 போ் வெள்ளிக்கிழமை பதவி ஏற்றுக் கொண்டனா். அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் அறங்காவலா்களாக ஏற்கெனவே நியமிக்கப்பட்டிருந்த 5 பேரில் ரவிபிரகாஷ், காா்த்திகா ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும் பதவியை ராஜிநாமா செய்தனா். இதைத் தொடா்ந்து புதிதாக நியமிக்கப்பட்ட ராயம்பாளையம் பொ.விஜயகுமாா், புதுப்பாளையம் கு.கவிதாமணி ஆகியோா் வெள்ளிக்கிழமை பதவி ஏற்றுக் கொண்டனா். நிகழ்ச்சிக்கு திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ் தலைமை வகித்தாா். அறங்காவலா் குழுத் தலைவா் பப்பீஸ் ஆ.சக்திவேல் முன்னிலை வகித்தாா். கோயில் செயல் அலுவலா் வி.பி.சீனிவாசன், அறங்காவலா்கள் பொன்னுசாமி, ஆறுமுகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com