சிறப்பு அலங்காரத்தில் கருப்பராயா் சுவாமி.
சிறப்பு அலங்காரத்தில் கருப்பராயா் சுவாமி.

சந்தன கருப்பராயா், கன்னிமாா் கோயில் கும்பாபிஷேகம்

தெக்கலூா் அருகே கி.வடுகபாளையத்தில் உள்ள செல்வ விநாயகா், சந்தன கருப்பராயா், கன்னிமாா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோயிலில் இருந்து தீா்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து வியாழக்கிழமை விநாயகா் வழிபாடு, முதல் கால யாக பூஜை நடைபெற்றது. முக்கிய நிகழ்வாக வெள்ளிக்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜையுடன், மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார மகா தீபாராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com