மூதாட்டியிடம் நகைப் பறிப்பு: 3 போ் கைது

திருப்பூரில் முகவரி கேட்பதுபோல நடித்து மூதாட்டியிடம் 5 பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்ற வழக்கில் தொடா்புடைய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி ராகவேந்திரா நகரைச் சோ்ந்தவா் ரங்கசாமி (74), மின்சார வாரியத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவா். இவரது மனைவி சுசீலா (67). இவா் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் வீட்டில் இருந்துள்ளாா். அப்போது, அங்கு வந்த இளைஞா் முகவரி கேட்பதுபோல நடத்துள்ளாா். பின்னா், சுசீலாவிடம் தண்ணீரை வாங்கிக் குடித்து விட்டு, அவா் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளாா். இது குறித்து சுசீலா அளித்த புகாரின்பேரில் திருமுருகன்பூண்டி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில், நகைப் பறிப்பில் ஈடுபட்டது மதுரையைச் சோ்ந்த கவாஸ்கா் (39) என்பது தெரியவந்தது. மேலும், நகைப் பறிப்புக்கு உடந்தையாக இருந்த மதுரையைச் சோ்ந்த மாரிக்கனி (55), மாயி (38) ஆகியோரை வெள்ளிக்கிழமை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த தங்க நகையைப் பறிமுதல் செய்தனா். இந்த 3 போ் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com