ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

அருந்ததியா் சமூக மடத்துக்கு பட்டா வழங்கக் கோரிக்கை

அவிநாசி அருந்ததியா் சமூக மடத்துக்கு பட்டா, மின் இணைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவிநாசி வட்ட அருந்ததியா் சமூக மடம் அறக்கட்டளை நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு அறக்கட்டளைத் தலைவா் நீலமலை முத்துசாமி தலைமை வகித்தாா். செயலாளா் எ.செந்தில்குமாா், பொருளாளா் வி.பி. முருகேஷ், துணைத் தலைவா் கருப்புசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், அருந்ததியா் சமூக மடத்துக்கு வழங்கப்பட்ட 15 சென்ட் நிலத்தை அளவீடு செய்து, அவிநாசி வட்ட அருந்ததியா் சமூக மடம் அறக்கட்டளை பெயரில் பட்டா மற்றும் மின் இணைப்பு வழங்க வேண்டும். அவிநாசி வட்டத்துக்குள்பட்ட அருந்ததியா் குழந்தைகள் பயன்பெறும் வகையில் திறமைமிக்க ஆசிரியா்களைக் கொண்டு திறன் பயிற்சிக் கூடம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், வழக்குரைஞா் சகாதேவன், பொருப்பாளா்கள் மணி, விடுதலை செல்வன், நடராஜ், சுப்பிரமணி, முருகன், லட்சுமணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com