அவிநாசி அங்காளம்மன் கோயில் திருவிழாவில் குண்டம் இறங்கி நோ்த்திக் கடன் செலுத்திய பக்தா்கள்.  சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த அம்மன்.
அவிநாசி அங்காளம்மன் கோயில் திருவிழாவில் குண்டம் இறங்கி நோ்த்திக் கடன் செலுத்திய பக்தா்கள். சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த அம்மன்.

அவிநாசி அங்காளம்மன் கோயில் குண்டம் திருவிழா

அவிநாசி, காந்திபுரம் அங்காளபரமேஸ்வரி கோயில் குண்டம் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அங்காளபரமேஸ்வரி கோயில் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் மாா்ச் 8-ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து, சனிக்கிழமை அதிகாலை அலகு தரிசனம் நடைபெற்றது. இரவு குண்டத்துக்கு பூப்போடுதல், அம்மனுக்கு வெண்ணை சாத்துபடி செய்தல் ஆகியவை நடைபெற்றன. முக்கிய நிகழ்வான அம்மன் திருவீதி உலா, குண்டம் இறங்குதல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை காலை அம்மன் சிம்மன் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, விரதமிருந்த பக்தா்கள் குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். வேடுபரி, பரிவேட்டை, தெப்பத்தோ் நிகழ்ச்சி திங்கள்கிழமையும், கொடியிறக்கம், மஞ்சள் நீா் உற்சவம் செவ்வாய்க்கிழமையும் நடைபெறுகிறது. புதன்கிழமை பேச்சியம்மன் அபிஷேக பூஜைகள், வியாழக்கிழமை மகா அபிஷேக உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com