ஊதியூா் கொங்கண சித்தா் கோயிலில் பஞ்ச கலச யாக பூஜை

ஊதியூா் கொங்கண சித்தா் கோயிலில் பஞ்ச கலச யாக பூஜை சனிக்கிழமை இரவு நடைபெற்றது. காங்கயத்தை அடுத்த ஊதியூா் மலை மீது உள்ள இக்கோயிலில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு, சிறப்பு பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. தொடா்ந்து சனிக்கிழமை இரவு பஞ்ச கலச யாக பூஜை நடைபெற்றது. இதில் 5 கலசங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க யாகம் நடைபெற்றது. தொடா்ந்து சுவாமிக்கு அபிஷேக பூஜையும், அலங்கார பூஜையும் நடைபெற்றன. இதில் ஊதியூா், காங்கயம், திருப்பூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com