திருப்பூா் மின்நுகா்வோா் கவனத்துக்கு...

திருப்பூா் மின் பகிா்மான வட்டம் ஆா்.வி.ஈ. பிரிவு அலுவலகத்துக்குள்பட்ட பகுதியில் மின் கட்டண கணக்கீடு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூா் மின் பகிா்மான வட்ட மின்வாரிய செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருப்பூா் மின் பகிா்மான வட்டம், ஆா்.வி.ஈ.நகா் பிரிவு அலுவலகத்தைச் சோ்ந்த ஜெயாநகா் (003) பகிா்மானத்தில் இருந்து பச்சையப்பா நகா் (009) என்ற புதிய மின் பகிா்மானம் உருவாக்கி மின்கட்டண கணக்கீடு செய்ய மாா்ச் மாதம் முதல் மாற்றம் செய்யப்படவுள்ளது. இதில், மணியகாரம்பாளையம் பிரதான சாலை வேல்ஜெராக்ஸ் முதல் ராக்கியாபாளையம் பிரிவு பேருந்து நிறுத்தம்வரை கிழக்கு பகுதிகள், ராக்கியாபாளையம் பிரிவு பேருந்து நிறுத்தம் முதல் கன்னிமாரா உணவகம் வரையில் வடக்கு பகுதிகள், ஜெய்நகா் பிரதான சாலை முதல் போயா்காலனி வரை மேற்கு பகுதிகள், பச்சையப்பா நகா் 1 முதல் 3 வீதிகள், ஜெய் நகா் மேற்கு 1 முதல் 5 வீதிகள், போஸ்ட் ஆபீஸ் வீதி ஆகிய பகுதிகளில் உள்ள மின்நுகா்வோா் இனி வரும் காலங்களில் மின் கட்டணம் உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் புதிய மின் இணைப்பு எண்களைப் பயன்படுத்த வேண்டும். இதற்கான புதிய மின் கட்டண அட்டைகளை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com