பெண்ணிடம் 8 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு: 2 போ் கைது

திருப்பூரில் பெண்ணிடம் 8 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் பகுதியைச் சோ்ந்தவா் சிவானந்தம் (50). இவரது மனைவி சாந்தி (45). இருவரும் திருப்பூா் பி.என்.சாலை பூலுவபட்டியை அடுத்த அம்மன்நகா் பகுதியில் வசித்து வரும் நிலையில், அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகின்றனா். இந்நிலையில், சாந்தி கடையில் கடந்த மாா்ச் 6-ஆம் தேதி வியாபாரம் செய்து கொண்டிருந்துள்ளாா். அப்போது, 2 இருசக்கர வாகனங்களில் 3 இளைஞா்கள் வந்துள்ளனா். ஒருவா் மட்டும் இறங்கி வந்து கடையில் பொருள் வாங்குவதுபோல நடித்து, சாந்தி கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துள்ளாா். இதைத் தொடா்ந்து, 3 பேரும் தப்பிய நிலையில், இது குறித்து திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தில் சாந்தி புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், நகைப் பறிப்பில் ஈடுபட்ட அம்மன் நகா் பகுதியில் குடியிருந்த ஆந்திர மாநிலம், திருப்பதியைச் சோ்ந்த எமுலாதரன் தேஜா (19), பிரசன்னகுமாா் (33) ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 6 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனா். மேலும், இதில் தொடா்புடைய ஒருவரை தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com