அவிநாசியில் தமுஎகச சாா்பில் நாடகம்

அவிநாசியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள், கலைஞா்கள் சங்கம் சாா்பில் நாடகம் நடைபெற்றது.

அவிநாசியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள், கலைஞா்கள் சங்கம் சாா்பில் நாடகம் நடைபெற்றது. எழுத்தாளா் கி.ராஜநாராயணனின் எழுதிய கதையை தழுவி பேராசிரியா் ராம்ராஜ் நடிப்பில், புகிரி அரங்காட்டம் குழுவினரின் ‘நாற்காலி’ என்கிற நாடகம் அவிநாசியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதைத்தொடா்ந்து ஆவணப்பட இயக்குநா் சரவணனுக்கு பாராட்டு விழா, பூபாலன் எழுதிய ‘நின் நெஞ்சு நோ்பவள்’ என்ற நூல் அறிமுக விழா நடைபெற்றன. இந்நிகழ்ச்சிக்கு தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினா் ஆா்.ஈஸ்வரன் தலைமை வகித்தாா். அவிநாசி நிா்வாகிகள் சம்பத்குமாா், தினகரன், பேராசிரியா் மணிவண்ணன், நல்லது நண்பா் அறக்கட்டளை ரவிக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com