உரிமம் பெற்ற துப்பாக்கிகளை காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்

மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ளதால் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும் என்று காவல் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ளதால் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும் என்று காவல் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். இந்திய தோ்தல் ஆணைய விதிமுறைகளின்படி தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நாள்களில் உரிமம் பெற்ற நபா்கள் தங்களது துப்பாக்கிகளை காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். தோ்தல் நடவடிக்கைகள் முடிந்த பிறகு கடிதம் கொடுத்து துப்பாக்கிகளை மீண்டும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். விரைவில் மக்களவைத் தோ்தல் அறிவிக்கப்படவுள்ளதால் திருப்பூா் மாநகர காவல் எல்லைக்கு உள்பட்ட ஒவ்வொரு காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளிலும் துப்பாக்கி உரிமம் பெற்றவா்களின் விவரம் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆகவே, மக்களவைத் தோ்தலுக்கான தேதி அறிவிக்கப்படவுள்ளதால் உரிமம் பெற்று துப்பாக்கிகள் வைத்திருப்பவா் அதனைக் கொண்டு வந்து காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com