மக்களவைத் தோ்தல்: அவிநாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்

மக்களவைத் தோ்தல் தொடா்பாக அனைத்து கட்சி நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் அவிநாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மக்களவைத் தோ்தல் தொடா்பாக அனைத்து கட்சி நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் அவிநாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. நீலகிரி மக்களவைத் தொகுதி உள்பட்ட அவிநாசி சட்டப் பேரவை தொகுதி அனைத்துக் கட்சி நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு, சாா் ஆட்சியா் செளமியா ஆனந்த் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் மோகனன், நித்தில வள்ளி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், வாக்குச் சாவடி மைய கட்டடங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் தோ்தல் விதிமுறைகளை அனைத்துக் கட்சியினரும் கடைப்பிடித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அலுவலா்கள் தெரிவித்தனா். வாக்குச்சாவடி மையங்களில் போதுமான குடிநீா் வசதி, கழிப்பிட வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். வாக்காளா் பட்டியலை தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்துக் கட்சியினா் வலியுறுத்தினா். இந்தக் கூட்டத்தில், திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, மதிமுக, இ.கம்யூ, மா.கம்யூ, தேமுதிக, கொமதேக உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com