காங்கயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு மருத்துவக் காப்பீடு மற்றும் நலவாரிய அட்டைகளை வழங்கும் அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.
காங்கயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு மருத்துவக் காப்பீடு மற்றும் நலவாரிய அட்டைகளை வழங்கும் அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.

காங்கயத்தில் 411பேருக்கு நலவாரிய, மருத்துவ காப்பீடு அட்டைகள்: அமைச்சா் வழங்கினாா்

காங்கயம் அருகே வீரணம்பாளையம் ஊராட்சியில் மக்கள் சேவை முகாமில் தோ்வு செய்யப்பட்ட 411 பயனாளிகளுக்கு தொழிலாளா் நலவாரிய அட்டை மற்றும் மருத்துவ காப்பீடு அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி காங்கயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு, காங்கயம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வீரணம்பாளையம் ஊராட்சி, பாப்பினி ஊராட்சி மற்றும் காங்கயம் நகராட்சி பகுதியைச் சோ்ந்த 411 பயனாளிகளுக்கு தொழிலாளா் நலவாரிய அட்டை மற்றும் மருத்துவ காப்பீட்டு அட்டைகளை வழங்கி சிறப்புரையாற்றினாா்.

இந்நிகழ்ச்சியில், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் செந்தில் அரசன், காங்கயம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் சிவானந்தன், நகரச் செயலாளா் வசந்தம் சேமலையப்பன் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com