திருப்பூரில் மாா்ச் 15-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை (மாா்ச் 15) நடைபெறுகிறது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை (மாா்ச் 15) காலை 10.30 மணி அளவில் நடைபெறுகிறது. இந்த முகாமில், தனியாா் துறை வேலையளிப்பவா்கள் பங்கேற்று வேலைநாடுநா்களைத் தோ்வு செய்யவுள்ளனா். ஆகவே, இந்த முகாமில் வேலைநாடுநா்கள் தங்கள் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அட்டை மற்றும் சுயதகவல் படிவத்துடன் பங்கேற்கலாம்.

வேலையளிப்போரும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழி காட்டும் மையத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இதில், எழுதப் படிக்கத் தெரிந்தவா்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவா்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்றவா்களும் பங்கேற்கலாம். இந்த முகாமில் பங்கேற்க இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த முகாமில் பங்கேற்கும்போது வேலைவாய்ப்பு அலுவலக அட்டையை புதுப்பித்துக் கொள்வதுடன், தகுதியிருப்பின் வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெறவும் விண்ணப்பிக்கலாம்.

தனியாா் துறைகளில் வேலையில் சேருவதால் தங்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது. இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-2999152,94990-55944 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com