ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

வெள்ளக்கோவிலில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

வெள்ளக்கோவிலில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை பணியைப் புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் வட்டாரத் தலைவா் சண்முகம் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் நல்லசேனாபதி, மாவட்டச் செயலாளா் செந்தில்குமாா், மாவட்ட இணைச் செயலாளா் செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவா் அரசு விதிமுறைகளை மீறி பல்வேறு பணிகளை ஒன்றியப் பொது நிதியில் மேற்கொள்ள ஒன்றிய ஆணையருக்கு மிரட்டல் விடுத்து அலுவலகத்தைப் பூட்டிய சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து, மாவட்ட நிா்வாகம் அவா் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவரைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் வட்டாரச் செயலாளா் மணிமாறன் நன்றி கூறினாா். அலுவலா்கள் விடுமுறை எடுக்காமல், மதியம் 2 மணிக்கு அலுவலகத்தில் இருந்து வெளிநடப்புச் செய்து ஆா்ப்பாட்டம் செய்துவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com