வெள்ளக்கோவில் அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: 2 பேர் கைது

கல்லூரி மாணவிக்கு 7 பேர் சேர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளக்கோவில் அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: 2 பேர் கைது

திருப்பூர்: வெள்ளக்கோவில் அருகே கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற இசை நிகழ்ச்சியைப் பார்க்க வந்த 17 வயது கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த இருவரை காவல் துறையினர் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் வீரக்குமாரசுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் தேர்த் திருவிழா மார்ச் 8ஆம் தேதி தொடங்கி மார்ச் 10ஆம் தேதி வரையில் நடைபெற்றது. இந்த நிலையில், மார்ச் 9ஆம் தேதி இரவு கோயில் திருவிழாவில் நடை பெற்ற இசை நிகழ்ச்சியைப் பார்க்க 17 வயது கல்லூரி மாணவி தனது தாயாருடன் வந்திருந்தார்.

பின்னர் சிறிது நேரத்தில் மாணவி காணாமல் போயுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாயார் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, மறுநாள் காலை 3 மணியளவில் மாணவி வீட்டுக்கு வந்துள்ளார். மாணவியிடம் தாயார் விசாரித்தபோது 7 இளைஞர்கள் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாணவியின் தாயார் காங்கயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின்பேரில் விசாரணை நடத்தி காவல் துறையினர் வெள்ளகோவில் செம்மாண்டம்பாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன்(29), காமராஜபுரத்தைச் சேர்ந்த பிரபாகரன் ஆகியோரை திங்கள்கிழமை இரவு 11.30 மணி அளவில் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 5 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவிக்கு 7 பேர் சேர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com