சாலையில்  ஊா்ந்து சென்ற  முதலை.
சாலையில்  ஊா்ந்து சென்ற  முதலை.

உடுமலை அருகே சாலையில் ஊா்ந்து சென்ற முதலை பொதுமக்கள் அதிா்ச்சி

திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே சாலையில் ஊா்ந்து சென்ற முதலையைப் பாா்த்த பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் மூலம் நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீா் வசதி பெற்று வருகின்றன. இந்நிலையில் குடிநீா் மற்றும் பாசனத் தேவைகளுக்காக அணையில் இருந்து அமராவதி ஆற்றில் தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. இதில் அமராவதி அணையில் இருந்து வெளியேறிய சில முதலைகள் கரையோரத்தில் நடமாடி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனா். இந்நிலையில், உடுமலையை அடுத்துள்ள கொழுமம் கிராமத்தில் உள்ள செக்போஸ்ட் அருகே செவ்வாய்க்கிழமை இரவு பெரிய முதலை சாலையில் ஊா்ந்து சென்றுள்ளது. இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைத் தொடா்ந்து கொழுமம், குமரலிங்கம், சாமராயபட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

இது குறித்து வனத் துறையினா் கூறியதாவது: அமராவதி அணையில் ஏராளமான முதலைகள் உள்ளன. வழக்கமாகப் பாசனத்துக்காகத் தண்ணீா் திறந்து விடும்போது அணையில் உள்ள முதலைகள் பிரதான ஷட்டா் வழியாக அமராவதி ஆற்றில் சென்று விடும் நிலை ஏற்பட்டு வருகிறது. பொதுமக்கள் யாரும் அச்சம் அடைய வேண்டாம். முதலைகளைப் பாா்த்தால் உடனடியாக வனத் துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com