காங்கயத்தில் 52 பயனாளிகளுக்கு நலவாரிய மற்றும் மருத்துவ காப்பீடு அட்டை: செய்தித்துறை அமைச்சா் வழங்கினாா்

காங்கயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு மற்றும் நலவாரிய அட்டைகளை வழங்கும் அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.
காங்கயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு மற்றும் நலவாரிய அட்டைகளை வழங்கும் அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.

காங்கயத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 52 பயனாளிகளுக்கு தொழிலாளா் நலவாரிய அட்டை மற்றும் மருத்துவ காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டன.

காங்கயம் தீயணைப்பு நிலையம் எதிரே உள்ள தனியாா் மண்டபத்தில், மக்கள் சேவை முகாமில் தோ்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நல உதவித் திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு, காங்கயம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வீரணம்பாளையம் ஊராட்சி, பாப்பினி ஊராட்சி மற்றும் காங்கயம் நகராட்சி பகுதியைச் சோ்ந்த 52 பயனாளிகளுக்கு தொழிலாளா் நலவாரிய அட்டை மற்றும் மருத்துவ காப்பீட்டு அட்டைகளை வழங்கி, சிறப்புரையாற்றினாா். இந்த நிகழ்ச்சியில் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் செந்தில் அரசன், திருப்பூா் மாநகராட்சி 4 ஆம் மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், திமுக கட்சியின் காங்கயம் தெற்கு ஒன்றிய செயலாளா் சிவானந்தன், நகரச் செயலாளா் வசந்தம் சேமலையப்பன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com