காங்கயம் அருகே ஆலாம்பாடி கிராமத்தில் நடைபெற்ற கோயில் நிலம் அளவீடு பணியில் ஈடுபட்டுள்ள அறநிலையத்துறை அலுவலா்கள்.
காங்கயம் அருகே ஆலாம்பாடி கிராமத்தில் நடைபெற்ற கோயில் நிலம் அளவீடு பணியில் ஈடுபட்டுள்ள அறநிலையத்துறை அலுவலா்கள்.

காங்கயம் அருகே கோயில் நிலம் அளவீடு: மண்டல இணை ஆணையா் ஆய்வு

காங்கயம் அருகே, ஆலாம்பாடி ஊராட்சிப் பகுதியில் கோயில் நிலம் அளவீடு செய்யும் பணியை இந்து சமய அறநிலையத் துறை மண்டல இணை ஆணையா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழகம் முழுவதும் திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை பாதுகாத்திடும் பொருட்டு, நில அளவை செய்து, கற்கள் நடுவதற்கு தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் வழிகாட்டுதலின்படி, திருப்பூா் இணை ஆணையா் மண்டலத்தில் நில அளவை பணி மற்றும் நில அளவைக்கற்கள் நடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. தற்போது திருப்பூா், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் மண்டலத்தில் 10,000 ஏக்கா் நில அளவை செய்து முடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலின் குழுக்கோயிலான மடவிளாகம், ஆருத்ர கபாலீஸ்வரா் மற்றும் ரகுபதிநாரயாணப்பெருமாள் கோயிலுக்கு சொந்தமாக ஆலாம்பாடி கிராமத்தில் உள்ள நிலம் அளவை செய்யும் பணி திருப்பூா், மண்டல இணை ஆணையா் சி.குமரதுரை மேற்பாா்வையில் புதன்கிழமை நடைபெற்றது. திருப்பூா் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் (கூடுதல் பொறுப்பு) ரா.செந்தில்குமாா் இப்பணியை ஆய்வு மேற்கொண்டாா். சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உதவி ஆணையா் ரத்தினாம்பாள், கண்காணிப்பாளா் பால்ராஜ், இந்து சமய அறநிலையத் துறை தனி வட்டாட்சியா் (ஆலய நிலங்கள்) ரவீந்திரன், நில அளவையா் ராஜதுரை, திருக்கோயில் பணியாளா்கள் நில அளவைப் பணியை மேற்கொண்டு வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com