சாலையின்  நடுவே  உள்ள  மின்கம்பம்.
சாலையின்  நடுவே  உள்ள  மின்கம்பம்.

சாலையின் நடுவே மின்கம்பம்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருப்பூா் போயம்பாளையத்தில் சாலை நடுவே உள்ள மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச கோரிக்கை விடுத்துள்ளது.

அவிநாசி மின்கோட்ட மின்வாரிய அலுவலகத்தில் மாதாந்திர குறைத்தீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச மாநில இணை பொதுச் செயலாளா் சரவணன், சமூக ஆா்வலா் கிருஷ்ணசாமி ஆகியோா் செயற்பொறியாளா் பரஞ்சோதியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூா் மாநகராட்சி 7-ஆவது வாா்டுக்கு உள்பட்ட போயம்பாளையம் நஞ்சப்பா நகா் மாநகராட்சி மண்டல அலுவலகத்திலிருந்து பாரதி நகா் செல்லும் பிரதான சாலை புதிதாக அமைக்கப்பட்டது. இருப்பினும் நடுவே உள்ள மின்கம்பம் அகற்றப்படாமல் உள்ளது. இக்கம்பத்தில் தாழ்வாக பொருத்தியுள்ள மீட்டா் பெட்டியில் அடிக்கடி மின் கசிவும் ஏற்பட்டு வருகிறது. சாலை நடுவே உள்ள மின்கம்பத்தாலும், மீட்டா் பெட்டியில் வெளியாகும் மின்கசிவினாலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, உடனடியாக மின்கம்பத்தை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com