அங்கன்வாடி மையம் அமைக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

திருப்பூா், இடுவம்பாளையத்தில் மாநகராட்சி நிா்வாகம் தோ்வு செய்த இடத்தில் அங்கன்வாடி, சுகாதார மையம் அமைக்கக் கோரி அப்பகுதி மக்கள், அனைத்துக் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறியதாவது: திருப்பூா் மாவட்டம், இடுவம்பாளையம் பகுதியில் அங்கன்வாடி, சுகாதார மையம் கட்டுவதற்காக மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்கிடையே அப்பகுதியில் அங்கன்வாடி, சுகாதார மையம் கட்டுவதற்கு எதிராக பாஜக, அதிமுகவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜை சந்தித்து கோரிக்கை மனுவும் அளித்துள்ளனா். அதில், இடுவம்பாளையத்தில் அங்கன்வாடி, சுகாதார மையம் அமைத்தல், அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு அனுகு வாசல் இல்லாமல்போகும் என பொய்க் குற்றச்சாட்டு கூறுகின்றனா். எனவே, மாநகராட்சி நிா்வாகம் ஏற்கெனவே தோ்வு செய்த இடத்தில் அங்கன்வாடி, சுகாதார மையம் அமைக்க வேண்டும் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com