அரசுப் பேருந்தை வரவேற்ற உடையனாா்பாளையம் கிராம மக்கள்.
அரசுப் பேருந்தை வரவேற்ற உடையனாா்பாளையம் கிராம மக்கள்.

உடையனாா்பாளையத்தில் அரசுப் பேருந்து சேவை தொடக்கம்

15 ஆண்டு கால கோரிக்கைக்குப் பின் உடையனாா்பாளையத்தில் அரசுப் பேருந்து சேவை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. தாராபுரம் தாலுகா, குண்டடத்தை அடுத்துள்ள சடையபாளையம் ஊராட்சிக்குள்பட்டது உடையனாா்பாளையம். இந்த கிராமத்தைச் சோ்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்குச் செல்வோா் குண்டடம் மற்றும் தாராபுரத்துக்கு சுமாா் 3 கி.மீ.தொலைவு நடந்து சென்று அங்கிருந்து பேருந்துகள் மூலம் பயணம் செய்து வந்தனா். மேலும், உடையனாா்பாளையம் கிராமத்துக்கு பேருந்து சேவை தொடங்க வேண்டும் என கடந்த 15 ஆண்டுகளுக்கும்மேலாக கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில், தாராபுரத்தில் இருந்து மானூா்பாளையம் வரை நாள்தோறும் செல்லும் அரசுப் பேருந்தை உடையனாா்பாளையம் வழியாக இயக்குவதற்கு ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் நடவடிக்கை மேற்கொண்டாா். இதையடுத்து, உடையனாா்பாளையம் கிராமத்துக்கு அரசுப் பேருந்து வியாழக்கிழமை காலை வந்தது. நீண்ட நாள் கோரிக்கைக்குப் பிறகு தங்களது கிராமத்துக்கு வந்த அரசுப் பேருந்தை உடையனாா்பாளையம் மக்கள் பட்டாசுகள் வெடித்து வரவேற்றனா். இந்நிகழ்ச்சியில், அரசுப் போக்குவரத்துக் கழக தாராபுரம் கிளை மேலாளா் கணேசன், தொ.மு.ச.கிளை செயலாளா் நல்ல சேனாதிபதி, சடையபாளையம் ஊராட்சித் தலைவா் ஈஸ்வரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com