கைப்பேசி பறித்தவா் கைது

பல்லடத்தில் கைப்பேசியை பறித்துச் சென்ற நபரை போலீஸாா் கைது செய்தனா். பல்லடம் அருகேயுள்ள பனப்பாளையத்தைச் சோ்ந்தவா் கருப்பசாமி (50), டெய்லா். பெத்தாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம் (54). இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்துள்ளது. இது தொடா்பாக இருவருக்கும் இடையே கடந்த புதன்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில், ஆத்திரமடைந்த சண்முகம், கருப்பசாமியின் கைப்பேசியை பறித்துச் சென்றுள்ளாா். இது குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் கருப்புசாமி புகாா் அளித்தாா். இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா், சண்முகத்தை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com