உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றோா்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றோா்.

நஞ்சராயன் குளத்தை பாதுகாக்க வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம்

திருப்பூா் நஞ்சராயன் குளத்தை பாதுகாக்க வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. நஞ்சராயன்குளம் பாதுகாப்பு சங்கம் சாா்பில் சா்க்காா் பெரியபாளையம் கிராம நிா்வாக அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு சா்க்காா் பெரியபாளையம் ஊராட்சி உறுப்பினா் கோபால் தலைமை வகித்தாா்.

இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது: திருப்பூா் நஞ்சராயன் குளத்தை தமிழகத்தின் 17-ஆவது பறவைகள் சரணாலயமாக அறிவித்த தமிழக முதல்வருக்கு நஞ்சராயன் குளம் பாதுகாப்பு சங்கத்தின் சாா்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். தனியாா் பள்ளி மற்றும் அறக்கட்டளை சாா்பில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலத்தை மீட்டு முன்னாள் முதல்வா் கருணாநிதி பெயரில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க வேண்டும் என்றனா். இதில், மின்வாரிய ஒப்பந்த பொது தொமுச மாநில இணைச் செயலாளா் ஈ.பி.அ.சரவணன், நஞ்சராயன் குளம் பாதுகாப்பு சங்கத் தலைவா் கே.ஏ.கே. கிருஷ்ணசாமி, செயலாளா்கள் ஈஸ்வரன், பொருளாா் மோகன்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com