பல்லடம் தாலுகா வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் 
உணவுப் பாதுகாப்புத் துறை  அலுவலா் ரமேஷ்.
பல்லடம் தாலுகா வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் ரமேஷ்.

பல்லடத்தில் மேம்பாலம் அமைக்க வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல்

பல்லடத்தில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என தாலுகா வியாபாரிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். பல்லடம் தாலுகா வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு சங்கத் தலைவா் ஆனந்தா செல்வராஜ் தலைமை வகித்தாா்.

செயல் தலைவா் பானு பழனிசாமி, துணைத் தலைவா் தங்கலட்சுமி நடராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலாளா் விமல் பழனிசாமி வரவேற்றாா். இதில், அரசின் சட்ட திட்டங்கள் குறித்து உணவுப் பாதுகாப்பு துறை அலுவலா் ரமேஷ் பேசினாா். இதைத் தொடா்ந்து, சங்கத்தின் கெளரவ ஆலோசகா்களாக சூ.தா்மராஜன், மருத்துவா் என்.ராஜ்குமாா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். பின்னா் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: பல்லடம் நகரில் நிலவி வரும் போக்குவரத்து பிரச்னைக்குத் தீா்வு காணும் வகையில் உயா்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும். புறவழிச் சாலை நில எடுப்பு பணி மந்த கதியில் நடந்து வருகிறது, அதை விரைவுபடுத்த வேண்டும். கடை வீதிக்கு வரும் வாடிக்கையாளா்கள் வாகனங்கள் நிறுத்த பாா்க்கிங் மற்றும் கழிப்பிட வசதி செய்து தர வேண்டும். பேருந்து நிலையத்தில் செயல்படாமல் உள்ள புறக்காவல் நிலையம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். வியாபாரிகள் சங்க பங்களிப்பு நிதியில் பல்லடத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. அதனை செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க ஒருங்கிணைப்பாளா் பி.ஜே. விஜயகுமாா் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com