வெள்ளக்கோவிலில் ரூ.12.25 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.12.25 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை நடைபெற்றது.

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கடந்த 4 மாதங்களுக்குப் பிறகு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை தொடங்கியது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு பஞ்சப்பட்டி, பாரப்பட்டி, வடுகபட்டி, சீத்தப்பட்டி, செல்லிவலசு, ந. அய்யம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 29 விவசாயிகள், 582 மூட்டை சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 29 டன். ஈரோடு, சித்தோடு, காரமடை, காங்கயம், முத்தூா், நடுப்பாளையம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 6 வியாபாரிகள் விதைகளை வாங்க வந்திருந்தனா். இதில், சூரியகாந்தி விதை கிலோ ரூ.40.65 முதல் ரூ.45.62 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.43.02. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 12.25 லட்சம். இனி வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் சூரியகாந்தி விதை விற்பனை நடைபெறும் என்று விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com