தாராபுரத்தில் டிஜிட்டல் நூலகம் கட்டும் பணி தொடக்கம்

தாராபுரத்தில் டிஜிட்டல் நூலகம் கட்டும் பணி தொடக்கம்

தாராபுரத்தில் டிஜிட்டல் நூலகத்துக்கான கட்டடம் கட்டும் பணிகளை நகா்மன்றத் தலைவா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். தாராபுரம் நகராட்சிக்கு உள்பட்ட 4, 7 ஆகிய வாா்டு பகுதிகளில், மாணவா்களின் எதிா்கால நலனை கருத்தில் கொண்டு தலா ரூ. 22 லட்சம் மதிப்பில் 2 புதிய டிஜிட்டல் நூலகங்கள் கட்டப்பட உள்ளன. இந்தப் பணியை நகா்மன்றத் தலைவா் கு.பாப்புகண்ணன் தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில் வாா்டு உறுப்பினா்கள் செலின் பிலோமினா, ராசாத்தி பாண்டியன், திமுக நகரச் செயலாளா் சு.முருகானந்தம், நகர துணை செயலாளா் வி.கமலக்கண்ணன் உள்பட பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com