ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 30 போ் கைது

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ரயில் மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி திருப்பூா் குமரன் சிலை அருகே இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் பதாகைகளை ஏந்தியபடி அங்கிருந்து பேரணியாகச் சென்று திருப்பூா் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனா். போராட்டத்துக்கு மாவட்ட தலைவா் எஸ்.அருள் தலைமை வகித்தாா். மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றவா்களை திருப்பூா் வடக்கு போலீஸாா் தடுத்து நிறுத்தினா். பின்னா் போராட்டத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்து அப்பகுதியில் இருந்த மண்டபத்தில் தங்க வைத்தனா். பின்னா் மாலையில் அனைவரையும் விடுவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com