திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்திய மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ். உடன், மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் உள்ளிட்டோா்.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்திய மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ். உடன், மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் உள்ளிட்டோா்.

மாவட்டத்தில் 21 துணை வாக்குச் சாவடிகள் அமைக்க முடிவு: மாவட்ட ஆட்சியா்

திருப்பூா் மாவட்டத்தில் 21 துணை வாக்குச் சாவடிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா். திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் துணை வாக்குச் சாவடிகள் உருவாக்குவது தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமை வகித்தாா். இதில், வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் வாக்குச் சாவடிகளைத் தணிக்கை செய்து அறிக்கை அளித்தனா். இதனடிப்படையில், திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் 1,500 வாக்காளா்களுக்குமேல் உள்ள வாக்குச் சாவடிகளை மறுசீரமைப்பு செய்து துணை வாக்குச் சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி, அவிநாசி தொகுதியில் ஒரு துணை வாக்குச் சாவடி, திருப்பூா் வடக்கு தொகுதியில் 7 துணை வாக்குச் சாவடிகள், திருப்பூா் தெற்கு தொகுதியில் 6 துணை வாக்குச் சாவடிகள், பல்லடம் தொகுதியில் 5 துணை வாக்குச் சாவடிகள், உடுமலையில் 2 துணை வாக்குச் சாவடிகள் என மொத்தம் 21 துணை வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. இந்தப் பட்டியில் தலைமைத் தோ்தல் அதிகாரி மூலமாக இந்திய தோ்தல் ஆணையா் ஆணையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படும் என்று மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், சாா் ஆட்சியா் செளமியா ஆனந்த் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com