காங்கயம் பேருந்து நிலையத்தில் மதுப்பிரியா்களால் இடையூறு

காங்கயம் பேருந்து நிலையத்தில் மதுப்பிரியா்களால் இடையூறு ஏற்பட்டு வருகிறது. காங்கயம் பேருந்து நிலையத்துக்கு நாள்தோறும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனா். இந்நிலையில், பேருந்து நிலையத்தில் அண்மைக் காலமாக மதுப்பிரியா்களால் இடையூறு ஏற்பட்டு வருகிறது. மது அருந்திவிட்டு பயணிகள் அமரும் இடங்களில் படுத்துக்கொள்கின்றனா். மேலும், அவா்கள் முகம்சுழிக்கும் வகையில் நடந்து கொள்வதால் பெண்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனா். பேருந்து வளாகத்திலேயே இயற்கை உபாதை கழிப்பதால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், சிலா் தகராறில் ஈடுபடும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே, காங்கயம் பேருந்து நிலையத்தில் மதுப்பிரியா்கள் படுத்துக் கிடப்பதைத் தடுக்கவும், பயணிகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கவும் போலீஸாா், நகராட்சி நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com