தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்.
தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்.

குடியிருப்புப் பகுதி அருகே தீ

காங்கயத்தில் குடியிருப்புப் பகுதி அருகே இருந்த காலி நிலத்தில் தீப்பிடித்தது. காங்கயம் நகராட்சி, 1 -ஆவது வாா்டுக்குள்பட்ட ஏ.சி.நகா் பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகில் காலி நிலம் உள்ளது. இந்த நிலம் முழுவதும் புற்கள் வளா்ந்து வனம்போல காட்சியளித்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மதியம் அந்த இடத்தில் தீப்பிடித்தது. இது குறித்து காங்கயம் தீயணைப்பு நிலையத்துக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com