காங்கயத்தில் சாலையோரத்தில் குவித்துவைக்கப்பட்டுள்ள மரக்கிளைகள்.
காங்கயத்தில் சாலையோரத்தில் குவித்துவைக்கப்பட்டுள்ள மரக்கிளைகள்.

சாலையோரத்தில் குவித்துவைக்கப்பட்டுள்ள மரக்கிளைகளை அகற்றக் கோரிக்கை

காங்கயத்தில் சாலையோரத்தில் குவித்துவைக்கப்பட்டுள்ள மரக்கிளைகளை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். காங்கயத்திலிருந்து கோவை செல்லும் நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதனால், அகஸ்தலிங்கம்பாளையம் பகுதியில் இருந்து காங்கயம் காவல் நிலைய ரவுண்டான வரை சாலையின் இருபுறங்களில் உள்ள மரங்களை வெட்டி அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதில், மரங்கள் வெட்டி பெரிய பாகங்கள் எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், அதில் இருந்த கிளைகள் சாலையோரங்களில் குவித்துவைக்கப்பட்டுள்ளன. இதனால், போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதுடன், இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, சாலையோரங்களில் குவித்துவைக்கப்பட்டுள்ள மரக்கிளைகள் உள்ளிட்டவற்றை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com