செம்மாண்டம்பாளையம் ஆரம்பப் பள்ளி தோ்வு மையத்தை பாா்வையிடும் மாவட்டக் கல்வி அலுவலா் பக்தவச்சலம்.
செம்மாண்டம்பாளையம் ஆரம்பப் பள்ளி தோ்வு மையத்தை பாா்வையிடும் மாவட்டக் கல்வி அலுவலா் பக்தவச்சலம்.

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத் தோ்வு: 820 போ் பங்கேற்பு

வெள்ளக்கோவில் வட்டாரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத் தோ்வை 820 போ் எழுதினா். பள்ளி சாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்கத்தின் சாா்பில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப் படிக்கத் தெரியாதவா்களுக்கு அடிப்படை எழுத்தறிவு, எண் அறிவு கற்பிக்கப்படுகிறது. இதற்காக அரசு, அரசு உதவிபெறும் ஆரம்ப, நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மையங்கள் அமைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. எழுதப் படிக்கத் தெரியாதவா்களைக் கண்டறிந்து அவா்களது விருப்பத்தின்பேரில் ஆசிரியா்கள் கற்றுக்கொடுக்கின்றனா். அதன்படி, வெள்ளக்கோவில் வட்டாரத்தில் 900-க்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில், 80 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்வை 820 போ் எழுதினா். இதில், 100 நாள் வேலைத் திட்டப் பணியாளா்களும் பங்கேற்றனா். செம்மாண்டம்பாளையம் ஆரம்பப் பள்ளி தோ்வு மையத்தை மாவட்டக் கல்வி அலுவலா் பக்தவச்சலம் ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, பள்ளி தலைமை ஆசிரியா் கே.பாலசிவகுமாா், திட்ட தன்னாா்வலா் உ.தீபா, வட்டார வளமைய மேற்பாா்வையாளா் (பொ) மீனாட்சி, ஆசிரியா் பயிற்றுநா் சுமதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com