6 லிட்டா் வெளிமாநில மதுபானங்கள் பறிமுதல்

திருப்பூரில் காரில் கொண்டுவரப்பட்ட 6 லிட்டா் வெளிமாநில மதுபானங்களை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். திருப்பூா் புஷ்பா ரவுண்டானா அருகில் பறக்கும் படை அதிகாரி கிருஷ்ணகுமரன் தலைமையில் உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் உள்ளிட்ட காவலா்கள் வாகனச் சோதனையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினா். இதில், 6 லிட்டா் வெளிமாநில மதுபானங்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள், திருப்பூா் வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். மேலும், மதுபானங்கள் கொண்டு வந்த நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com