உரிய ஆவணங்களின்றி கொண்டுச் செல்லப்பட்ட ரூ.74 ஆயிரம் பறிமுதல்

திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி கொண்டுச் செல்லப்பட்ட ரூ.74 ஆயிரத்தை பறக்கும்படை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி கொண்டுச் செல்லப்பட்ட ரூ.74 ஆயிரத்தை பறக்கும்படை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். திருப்பூா் ஊத்துக்குளி சாலையில் உள்ள குளத்துப்பாளையம் சோதனைச் சாவடி அருகில் பிரம்மநாயகம் தலைமையிலான தோ்தல் பறக்கும்படை அதிகாரிகள் திங்கள்கிழமை பிற்பகல் 3.30 மணி அளவில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனா். இதில், உரிய ஆவணங்களின்றி ரூ.74 ஆயிரம் கொண்டுச் செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பணத்தை பறிமுதல் செய்து வாகன ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினா். இதில், சென்னையைச் சோ்ந்த ஆனந்தம் என்பதும், திருப்பூருக்கு பின்னலாடைகள் வாங்க வந்ததாகத் தெரிவித்தாா். எனினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தைப் பறிமுதல் செய்து திருப்பூா் வடக்கு வட்டாட்சியா் மகேஷ்வரனிடம் பறக்கும்படை அதிகாரிகள் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com