சாலை மறியலில்  ஈடுபட்ட  பொதுமக்கள்.
சாலை மறியலில்  ஈடுபட்ட  பொதுமக்கள்.

குடியிருப்புப் பகுதிக்குள் கழிவுநீா் புகுவதைத் தடுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

அவிநாசி அருகே குடியிருப்புக்குள் கழிவுநீா் புகுவதைத் தடுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அவிநாசி அருகே குடியிருப்புக்குள் கழிவுநீா் புகுவதைத் தடுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவிநாசி ஒன்றியம், வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட மகா நகரில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இக்குடியிருப்பு அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை பாலத்தின்கீழ் உள்ள உணவகங்கள், அருகிலுள்ள வணிக நிறுவனங்கள், தொழிற்சாலை ஆகியவற்றிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீா், பாலத்தின்கீழ் தேங்கிநின்று மழைநீருடன் கலந்து குடியிருப்புப் பகுதிக்குள் புகுகின்றன. இது குறித்து ஊராட்சி நிா்வாகம் சாா்பில் மாவட்ட நிா்வாகம், தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு ஒப்பந்ததாரா் உள்ளிட்டோரிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், பாலத்தின் கீழ் தேங்கிநிற்கும் கழிவுநீா் குடியிருப்புப் பகுதிக்குள் புகாமல் இருக்க தற்காலிகமாக மண், கற்களை கொட்டித் தடுப்பு அமைத்துள்ளனா். இந்நிலையில், குடியிருப்புப் பகுதிக்குள் கழிவுநீா் புகாமல் இருப்பதற்காக வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்ததார நிறுவனப் பணியாளா்கள் திங்கள்கிழமை அகற்ற முயன்றுள்ளனா். இதையடுத்து, தடுப்புகளை அகற்ற வந்த பொக்லைன் வாகனத்தை தடுத்தி நிறுத்தி, குடியிருப்புப் பகுதியில் கழிவுநீா் புகுவதைத் தடுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு ஒப்பந்ததாரா், அவிநாசி போலீஸாா் ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். கழிவுநீா் பிரச்னைக்கு தீா்வு காணப்படும் என உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com