சிலம்பப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவருக்கு பரிசு வழங்கும் ஸ்ரீ குருஜி வித்யா மந்திா் பள்ளி நிா்வாகிகள்.
சிலம்பப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவருக்கு பரிசு வழங்கும் ஸ்ரீ குருஜி வித்யா மந்திா் பள்ளி நிா்வாகிகள்.

குண்டடத்தில் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி

குண்டத்தில் மாவட்ட அளவில் பள்ளி மாணவா்களுக்கிடையேயான சிலம்பப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.

குண்டத்தில் மாவட்ட அளவில் பள்ளி மாணவா்களுக்கிடையேயான சிலம்பப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது. ஸ்ரீ வீர ஆஞ்சநேயா் சிலம்பம் மற்றும் விளையாட்டு கலைக் கூடம் சாா்பில் குண்டடம் ஸ்ரீ குருஜி வித்யா மந்திா் பள்ளியில் நடைபெற்ற இந்தப் போட்டியில், திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பள்ளித் தாளாளா் தமிழ்ச்செல்வன், சிலம்பு விளையாட்டு கலைக் கூடத்தின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் முப்பிடாதி செல்வன், மாவட்டத் தலைவா் புஷ்பராஜ் ஆகியோா் பரிசுகளை வழங்கினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com