தோ்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்பிலான வெள்ளிப் பொருள்களை ஆய்வு செய்யும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் உள்ளிட்டோா்.
தோ்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்பிலான வெள்ளிப் பொருள்களை ஆய்வு செய்யும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் உள்ளிட்டோா்.

குண்டடத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான 13 கிலோ வெள்ளிப் பொருள்கள் பறிமுதல்

குண்டடத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்பிலான 13 கிலோ வெள்ளிப் பொருள்களைத் தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

குண்டடத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்பிலான 13 கிலோ வெள்ளிப் பொருள்களைத் தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். திருப்பூா் மாவட்டம், தாராபுரம் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட குண்டடம் காவல் நிலையம் அருகே தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் திவ்யா தலைமையிலான பறக்கும் படைக் குழுவினா் திங்கள்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த மாருதி வேனை சோதனையிட்டபோது, அதில் உரிய ஆவணங்களின்றி ரூ.15 லட்சம் மதிப்பிலான வெள்ளிப் பொருள்கள் எடுத்துச்செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அதனைப் பறிமுதல் செய்த பறக்கும் படையினா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலரான தாராபுரம் கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com