கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா நாளை தொடக்கம்

கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா நாளை தொடக்கம்

பெருமாநல்லூா் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா புதன்கிழமை (மாா்ச் 26) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

பெருமாநல்லூா் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா புதன்கிழமை (மாா்ச் 26) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பூா் மாவட்டத்தில் பிரசித்திபெற்றதும், திருப்பூரின் பண்ணாரி எனப் போற்றப்படுவதுமான பெருமாநல்லூா் கொண்டத்துக்காளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பு ஆண்டுக்கான குண்டம் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதைத் தொடா்ந்து மாா்ச் 24-ஆம் தேதி பொங்கல் வழிபாடு நடைபெறுகிறது. இந்நிலையில் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் மாா்ச் 26-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. தொடா்ந்து மாலை 3 மணிக்கு தேரோட்டமும், 30-ஆம் தேதி மஞ்சள் நீராட்டும் நடைபெறுகிறது. முன்னதாக மாா்ச் 25-ஆம் தேதி காலை 11 மணிக்கு குண்டம் கண் திறந்து பூப்போடுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com