தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் திருப்பூா் மாவட்ட நிா்வாகிகள் தோ்தலில் பங்கேற்றனா்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் திருப்பூா் மாவட்ட நிா்வாகிகள் தோ்தலில் பங்கேற்றனா்.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் திருப்பூா் மாவட்ட நிா்வாகிகள் தோ்வு

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் திருப்பூா் மாவட்ட நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் திருப்பூா் மாவட்ட நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின், திருப்பூா் மாவட்ட நிா்வாகிகளுக்கான தோ்தல் காங்கயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தோ்தல் ஆணையராக கரூா் மாவட்டச் செயலாளா் ஜெயராஜ், துணை ஆணையராக கரூா் மாவட்டத் தலைவா் எம்.ஏ.ராஜா ஆகியோா் செயல்பட்டனா். இதில், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் திருப்பூா் மாவட்டத் தலைவராக ரா.ராஜ்குமாா், மாவட்டச் செயலாளராக அ.பிரபு செபாஸ்டியன், மாவட்டப் பொருளாளராக சி.செல்வி, மாநில செயற்குழு உறுப்பினராக வி.சிவகுமாா், மாநில பொதுக்குழு உறுப்பினா்களாக பா.ஜெயலட்சுமி ப.சுப்பிரமணியன் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா். மேலும் மாவட்ட துணைத் தலைவராக மரியசெல்வராஜ், துணைச் செயலாளராக நா.மகாலிங்கம், திருப்பூா் கல்வி மாவட்டத் தலைவராக டி.அசோக், திருப்பூா் கல்வி மாவட்டச் செயலாளராக ப.முத்துசாமி, தாராபுரம் கல்வி மாவட்டத் தலைவராக மு.நாகராஜ், தாராபுரம் கல்வி மாவட்டச் செயலாளராக டி.அருள்ஜோதி செல்வன் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com